பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு : நீடிக்கப்படும் காலம்

பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் தன்மை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியுடன் காலாவதியாகவிருந்தது. இந்தநிலையில், குறித்த பாடசாலை காலணி வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.