பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (25) முதல் ஆரம்பமாகிறது.

இது தொடர்பான முன்னோடி திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

பாடசாலை மாணவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாட்டைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கவழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி சாதனை நிலைகளின் வளர்ச்சிக்கு பங்களித்தல் மற்றும் உள்ளூர் உணவு கலாச்சாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய நோக்கங்களுடன் அரசாங்கம் இத்திட்டத்தை செயற்படுத்துகிறது.

Advertisement

இதற்காக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 1.6 மில்லியன் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு உணவு வழங்கப்படும்.

காலை 7.30 முதல் 8.30 வரை இந்த காலை உணவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.