பாடசாலை மாணவர்களுக்கு இலவச உணவு

தரம் 1 முதல் 5 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மார்ச் மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்கள் தொடர்பில் சுகாதாரத்துறை வௌிக்கொணர்ந்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளதுடன், இதற்காக 16.6 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement