பாடசாலையில் மயங்கி விழுந்த மாணவி மரணம்

கலவான பிரதேசத்தில் பாடசாலையில் மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கலவான – மீபாகம ஜயந்தி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

13 வயதான இமல்கா சத்சரணி என்ற மாணவி இன்று (06) காலை பாடசாலை சந்திப்பின் போது மயங்கி கீழே விழுந்துள்ளார்.

Advertisement

அதன் பின்னர், அவர் கலவானை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அதற்குள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.