பாக்கு பறிக்கச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி பலி

பதுளை, புஸ்ஸல்லகொல்ல பிரதேசத்தில் திருட்டுத்தனமாக பாக்கு பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

பதுளை, புஸ்ஸல்லகொல்ல, நுகே ஹந்திய பிரதேசத்தில், மற்றுமொரு நபருடன் திருட்டுத்தனமாக பாக்கு பறிக்கச் சென்ற போது, குறித்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை, ஹம்பாவெல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய விமல்சா விதுரங்க ஜயசேகர என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் பாக்கு திருடுவதற்காக மற்றுமொரு நபருடன் இரவு வேளையில் சென்ற குறித்த இளைஞன், அங்குள்ள காணி உரிமையாளர் ஒருவரால் அறுக்கப்பட்டிருந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞருடன் இரகசியமாக பாக்கு பறிக்கச் சென்ற மற்றைய இளைஞர் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்திய விசாரணையில். அவர்கள் போதைக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.