பல வைத்தியசாலைகளில் இன்று பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் பல முக்கிய வைத்தியசாலைகளின் சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதார தொழிற்சங்கங்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணக் கோரி நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை நடத்தியிருந்தன.

Advertisement

அதன்படி இன்று (01) காலை 6.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் பல முக்கிய வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டுள்ளது.