பரீட்சை கடமை கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மேல்மாகாண பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வில் சுசில் பிரேமஜயந்த கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், இது தொடர்பில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement