பங்களாதேஷ் கப்பலை கடத்திய சோமாலிய கடற்கொள்ளையர்கள்

பங்களாதேஷுக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும் அதன் பணியாளர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொசாம்பிக் தலைநகர் மபுடோ துறைமுகத்தில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கி பயணித்த ‘எம்.வி. அப்துல்லா’ என்ற கப்பல் நேற்று காலை கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 55,000 தொன் நிலக்கரி ஏற்றப்பட்ட கப்பலை கடத்திய பின்னர், 23 பேர் கொண்ட அதன் பணியாளர்கள் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இருந்து 600 கடல் மைல் தொலைவில் உள்ள சோமாலியாவின் தலைநகரான மொகடிஷூவின் கிழக்கே கடற்பரப்பில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட குழுவினர் அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.