பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்தியது.

இதன்போது, இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்தது.

அதன்படி பங்களாதேஷ் அணிக்கு 511 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸிற்காக அஞ்சலோ மெத்தியூஸ் 56 ஓட்டங்களைப் பெற்றார்.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 531 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.