நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்த வர்த்தகர்

கொழும்பில் நேர்காணலுக்கு சென்ற திருமணமான இளம் பெண்ணிடம், கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைக்கு தேவையான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளை விசாரணை அதிகாரிகளுக்கு வழங்குமாறு தொலைபேசி நிறுவனங்களுக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

குறித்த வர்த்தகர் வாட்ஸ்அப் மூலம் இளம் பெண்ணை அடையாளம் கண்டுகொண்டதாகவும், நேர்முகப்பரீட்சைக்கு வருமாறும் அறிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், இளம் பெண் தனது கணவருடன் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றுக்கு சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

இதன்போது இளம் பெண்ணின் கணவரை கீழே தடுத்து நிறுத்தி பெண்ணை மேலே அழைத்து சென்ற வர்த்தகர் அவரிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் பொலிஸார் நீதிமன்றில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.