Advertisement

நாளை முதல் வைத்தியசாலைகளில் ஏட்படவுள்ள சிக்கல்; அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் திடீர் தீர்மானம்!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

வைத்தியர்களுக்கான மேலதிக கொடுப்பனவை, இந்த மாதம் முதல் 35,000 ரூபாய் முதல் 70,000 ரூபா வரை அதிகரிப்பதாக அரசாங்கம் முன்னதாக உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், குறித்த மேலதிக கொடுப்பனவை வழங்காதிருப்பதற்கு தற்சமயம் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதன் அடிப்படையில், தாம் நாளை முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Advertisement

அதேநேரம், வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா மேலதிக கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டுமென கோரி, தாதியர்கள், ஆய்வக தொழில்நுட்ப நிபுணர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் என சுமார் 70க்கும் அதிகமான மருத்துவ துறைசார் தொழிற்சங்கத்தினர் அண்மையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பணிப்புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.