நான் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன்!

எந்த நேரத்திலும் ஓய்வு பெறத் தயார் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

இன்று (20) காலை ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்த போதே டொக்டர் ருக்ஷான் பெல்லன இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

Advertisement

“இன்று சுகாதார அமைச்சும், சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளும் வாய்மொழியாக நிர்வாகத்தை செய்து வருகின்றனர். இருநூறு முந்நூறு பேர் சேர்ந்து கூச்சல் குழப்பம் இட்டால் எல்லாம் சரி, ஒருவரை விரட்டி விடுவார்கள். எனவே, இந்த சூழ்நிலையில் தான் முடிவு செய்தேன். எனக்கும் ஓய்வு பெறும் வயதாகிறது. நானும் ஓய்வு பெற தயாராக இருக்கிறேன். உதவி செய்ய வேண்டும், ஆனால் நன்றி மறப்பவர்களுக்கு செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லை” என்றார்.