நாட்டுக்காக சம்பளத்தை கைவிட்ட ஜனாதிபதி

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் காரணமாக தனது சம்பளத்தை கைவிட பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டின் நிதி நிர்வாகத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.