நடு வீதியில் கவிழ்ந்த எரிபொருள் தாங்கி ஊர்தி

யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கி ஊர்தியும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இ.போ.ச. பேருந்தை முந்தி செல்ல முற்பட்ட எரிபொருள் தாங்கி ஊர்தி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியதில், எரிபொருள் வீதியில் கொட்டியது.

Advertisement

சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பேருந்தை ஒரமாக நிறுத்தியுள்ளார்.

இதன்போது அவ்வீதியல் பயணித்த டிப்பர் வாகனம் கொட்டியிருந்த எரிபொருளில் சறுக்கி விபத்துக்குள்ளானது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

விபத்து காரணமாக எரிபொருள் தாங்கி ஊர்தியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்பட்டது.

விபத்துக்குள்ளான வாகனங்களை கனரக வாகனங்கள் மூலம் அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டதுடன் வீதியில் வாகனங்கள் சறுக்காது இருக்க மண் பரப்பப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.