தோனியை சந்திக்க தயாராகும் யாழ் இளைஞன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனியை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 17 வயது கிரிக்கெட் வீரர் ஒருவர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் – சென்.ஜோன்ஸ் கல்லூரியைச் சேர்ந்த குகதாஸ் மாதுலன் என்ற 17 வயது மாணவனை தோனி சந்திப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மதிப்பிடப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க போன்று பந்து வீசும் திறமை இந்த மாணவனுக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.