தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவால் அதிகரிக்க அனுமதி

தொழிலாளர்களின் குறைந்தபட்ச வேதனத்தை 5,000 ரூபாவினால் அதிகரிப்பதற்காக தேசிய குறைந்தபட்ச வேதன சட்டத்தை திருத்தம் செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போதைய தேசிய குறைந்தபட்ச வேதனத்தை 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

இதற்கான யோசனையை தொழில் அமைச்சர் அமைச்சரவையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.