தொடரும் பொலிஸாரின் அதிரடி வேட்டை! – கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 910 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 676 பேரும், குற்றப் புலனாய்வு பிரிவினால் அனுப்பப்பட்ட பட்டியலில் உள்ள 234 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களில் 17 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Advertisement

அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான இரண்டு பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் காவல்துறை போதைப் பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.