தேவ ஆராதனையின் போது பெண் ஒருவர் மரணம்

மதுரங்குளி பொலிஸ் பிரிவில் உள்ள தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற தேவ ஆராதனையின் போது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லம, வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

விசாரணையில் அந்த பெண்ணுக்கு நீண்ட நாட்களாக இதயநோய் மற்றும் சளி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

போதகர் பிரார்த்தனை செய்து அந்த தண்ணீரை பெண்ணுக்கு குடிக்க கொடுத்த பிறகு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக பெண் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சடலம் புத்தளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (25) இடம்பெறவுள்ளது.