தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு 4.85 மில்லியன் ரூபா வருமானம்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் 4.85 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அதன் உதவிப் பணிப்பாளர் தினுஷிகா மானவடு தெரிவித்தார்.

அதற்கமைய, ஏப்ரல் 13 ஆம் திகதியன்று 1.35 மில்லியன் ரூபாவும், ஏப்ரல் 14 ஆம் திகதியன்று 1.65 மில்லியன் ரூபாவும், ஏப்ரல் 15 ஆம் திகதியன்று 1.85 மில்லியன் ரூபாவும் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.