துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பு சட்டபூர்வமானதல்ல – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாரத லக்ஷ்மனின் மனைவி சுமனா பிரேமச்சந்திர, மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் முன்வைத்த மனுக்களை விசாரித்த பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை இன்றுழ்(17) வழங்கியது.

இதன்படி குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement