தியத்தலாவ விபத்து: சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு

தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன ஒட்ட பந்தய போட்டியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த சிறுமி ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

வெலகெதர – கல்லேதண்ட வெளிமடை பகுதியைச் சேர்ந்த சத்சரணி காவின்யா எனும் 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் மரணித்ததுடன், 21 பேர் காயமடைந்து தியத்தலாவ மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

Advertisement

காயமடைந்த அனைவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில், மேற்படி சிறுமி தொடர்ந்தும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் குறித்த சிறுமி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.