தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (22) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது 6.3 ரிக்டர் அளவில் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கத்துக்குப் பிறகு நேற்று (22) இரவு முதல் இன்று (23) காலை வரை 80க்கும் மேற்பட்ட அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

Advertisement

ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தலைநகர் தைபேயிலும் உணரப்பட்டது.

மேலும் அதன் கட்டிடங்களும் அதிர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும்இ இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.