தவறான உறவால் பறிபோன யுவதியின் உயிர்

சீதுவ பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (14) சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுவாடிய பகுதியில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலுகொல்லாகம – மெகொடவெவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Advertisement

உயிரிழந்த பெண் திருமணத்துக்கு அப்பாலான உறவை பேணி வந்துள்ளதுடன், குறித்த நபரே அவரை போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் பின்னர் சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.