தலைப்பிறை தென்பட்டது; நாளை முதல் நோன்பு ஆரம்பம்

நாட்டின் பல பாகங்களிலும் இன்று புனித ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமையினால் நாளை (12) ரமழான் நோன்பு ஆரம்பமாவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று மஹ்ரிப் தொழுகையின் பின்னர் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நடைபெற்றது.