தற்போதைய அரசாங்கம் SLPPயின் அரசாங்கமா என்பதில் சந்தேகம்

தேர்தல்கள் இரண்டையும் ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இணங்கப் போவதில்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஸ ​தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் எனவும் பசில் ராஜபக்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Advertisement

தற்போதைய அரசாங்கம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமா என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதாகவும் பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தனியார் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனை கூறினார்.