தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளர் கைது

ஸ்ரீலங்கா ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ள தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமையாளரான தமீம் ரஹ்மான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை காரணமாகவே அவர் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் விளையாட்டு தொடர்பான குற்றங்களை தடுக்கும் சிறப்பு புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Advertisement

‘மெட்ச் பிக்சிங்கை பரிந்துரைக்க முயன்ற’ சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.