தமிதா – அவரது கணவரின் விளக்கமறியல் நீடிப்பு

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்தமை தொடர்பில் அண்மையில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement