தமிதாவுக்கு இம்முறை புத்தாண்டு கொண்டாட்டம் சிறையில்

நிதி மோசடி தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க இன்று (05) கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிதி மோசடி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபரான தமிதா அபேரத்னவையும் அவரது கணவரையும் நேற்று (04) செய்திருந்தனர்.