தமிதாவுக்கும் அவரது கணவருக்கும் வெளிநாடு செல்ல தடை

கொரியா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி 30 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் வெளிநாடு செல்வதை தடை செய்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை கருத்திற்கொண்டே நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.