தனுகவின் உதவியாளர்கள் மூவர் ஹெரோயினுடன் கைது

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான தனுகவின் உதவியாளர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று (24) முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஒரு கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக கருதப்படும் 50 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

Advertisement

34, 31 மற்றும் 49 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​தற்போது வெளிநாட்டில் உள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான தனுக என்பவரின் போதைப்பொருள் வர்த்தகத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரியவந்துள்ளது.