தங்கொட்டுவ பகுதியில் பெண்ணொருவர் மர்ம மரணம்

தங்கொட்டுவ, கட்டுகெந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகெந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே நேற்று (31) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அவரது மகன் மாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ​​அறையில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் தாய் சடலமாக கிடந்துள்ளார்.

Advertisement

இது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.