தகுதியான அனைவருக்கும் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும்!

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டு மக்களை வாழ வைப்பதில் “அஸ்வெசும” மற்றும் “உறுமய” வேலைத் திட்டங்கள் பெரும் பங்காற்றுவதாகவும், நிவாரணம் கிடைக்க வேண்டிய அனைவருக்கும் துரிதமாக நிவாரணம் வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

“அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அரச அதிகாரிகளின் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நேற்று (29) முற்பகல் நடைபெற்ற “அஸ்வெசும” வேலைத் திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

Advertisement