டில்ஷானின் தந்தை காலமானார்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷானின் தந்தை துவான் மொஹமட் ஜுனைதீன் காலமானார்.

அவர் தனது 71 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிக்கிச்சை பலனின்றி நேற்று (07) உயிரிழந்துள்ளார்.

Advertisement

இறுதிக் கிரியைகள் நாளை களுத்துறை மாகாண பொது மயானத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.