டிக்டொக்கில் கால்பதித்த ட்ரம்ப்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டோனல்ட் ட்ரம்ப், சீன செயலியான டிக்டொக்கில் புதிய கணக்கொன்றை ஆரம்பித்துள்ளார்.

அவரை டிக்டொக்கில் 30 இலட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.

அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்திருந்தார்.

Advertisement

இந்தநிலையில் தற்போது அவரே டிக்டொக்கில் இணைந்துள்ளமை விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர் தேர்தல் பிரசார உத்திக்காக டிக்டொக்கில் இணைந்து இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.