ஜோர்ஜியா சென்றார் ஷெஹான்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ஜோர்ஜியா நோக்கி பயணமாகியுள்ளார்.

இந்த கூட்டத்தொடர் இன்று(02) முதல் எதிர்வரும் 5ஆம் திகதி வரை ஜோர்ஜியாவின் தலைநகர் Tbilisi நகரில் இடம்பெறவுள்ளது.

ஆசிய அபிருத்தி வங்கியின் ஆரம்ப கால உறுப்பினரான இலங்கை, அதன் நிதியுதவி மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பல்வேறு ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

Advertisement

இந்த கூட்டத்தொடரில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், இவ்வருட மாநாடு ஏனைய உறுப்பு நாடுகளுடன் கூட்டுறவை ஏற்படுத்துவதற்கான களமாக அமையும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.