ஜனாதிபதி யாழ் விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் விசேட உலங்கு வானுர்தியில் வந்திறங்கிய ஜனாதிபதியை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

வடக்கிற்கு மூன்று நாள் விஜயமாக வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.

Advertisement

அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதுடன் , 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.