ஜனாதிபதி புலமைப் பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கு மத்தியில் கல்விகற்கும் பாடசாலை மாணவர்களை ஊக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலில் ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஏப்ரல் 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் 2024/2025 திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பாக பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை ஜனாதிபதி நிதியத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கமான www.facebook.com/president.fund மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

Advertisement