ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக அரசாங்கத்தில் பாலியல் தொழில் சட்டரீதியாக அனுமதிக்கப்படும் ..

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் விபச்சார தொழிலுக்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படும் என அக்கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர் சமன்மலீ குணசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இணைய தள ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த சமூகத்தில் கடுமையான பாதுகாப்பாற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த திட்டம் வகுக்கப்படும் என கூறினார்.

Advertisement

பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற நிலை காணப்படுவதாக கூறியுள்ள அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பாலில் தொழில் சட்டரீதியாக அங்கீகாரம் வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.