சீன துணை அமைச்சர் இன்று இலங்கைக்கு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சன் ஹையன்(Sun Haiyan) இன்று(23) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் நாட்டிற்கு வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement