சீனா செல்கிறார் பிரதமர்

சீன பிரதமரின் அழைப்பிற்கிணங்க பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(25) சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது 05 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமரின் உத்தியோகபூர்வ விஜயம் இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர் சீனாவில் தங்கியிருப்பார்.

Advertisement

சீன அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரம் பிரதமரின் விஜயம் மேற்கொள்ளப்படுவதாகவும், அங்கு அவர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் சீன விஜயத்தின் போது, ​​சீனப் பிரதமர் லீ குவாங்கைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த விஜயத்தின் போது சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.