சீதுவயில் பெண் கொலை: பிரதான சந்தேக நபர் கைது

சீதுவ – முத்துவாடிய பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேல் மதன்வல பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (17) அளவுக்கதிகமான மருந்தை உட்கொண்டு பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement