சிறுமி துஷ்பிரயோகம்: கைதான நபர் தப்பியோட்டம்

மன்னாரில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

மன்னார், தலைமன்னார் பகுதியில் 9 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் 55 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா வைத்தியசாலையில் கடந்த வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை (03) குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

Advertisement

அவரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.