Advertisement

சற்றுமுன் மேலுமொரு பயங்கரம்; பிக்கு ஒருவர் சுட்டுக் கொலை!

கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டிய பகுதியிள்ள விகாரையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் தேரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

44 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குறித்த தேரர் உயிரிழந்துள்ளார்.

Advertisement

T-56 ரக துப்பாக்கியினால் இந்த சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், 04 சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது,