சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை படைத்தார்

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதமடித்த முதல் இலங்கையராக பெத்தும் நிஸ்ஸங்க சாதனை படைத்தார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 139 பந்துகளை எதிர்கொண்ட அவர் 8 சிக்ஸர்களுடன் 210 ஓட்டங்களைக் குவித்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதற்கு முன்னர் சனத் ஜயசூரிய பெற்ற 188 ஓட்டங்களே இலங்கை சார்பாக வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.

Advertisement