சமன் ரத்நாயக்க கைது

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு நேற்று மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Advertisement

இதன்போது சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க தொடர்பில் போதுமான சாட்சியங்கள் காணப்படுமாயின் அவரை கைது செய்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு காணப்படுவதாக மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம தெரிவித்திருந்தார்.