‘சமன் கொல்லா’ வின் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை இடந்தோட்டையில் உள்ள பிரபல பாதாள உலக நபரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான அகம்பொடி சஜித் சமன் பிரியந்த என்றழைக்கப்படும் ‘சமன் கொல்லா’ வின் வீட்டின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சமன் கொல்லாவின் தாயும் மூன்று சகோதரிகளும் அந்த நேரத்தில் வீட்டிற்குள் இருந்தபோது பல தோட்டாக்கள் வீட்டின் சுவர்கள் மற்றும் கதவுகளைத் தாக்கியுள்ளன.

Advertisement

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், சந்தேகத்திற்கிடமான T-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.