சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த நால்வர் கைது

வடமராட்சி மாமுனை கடற்பகுதியில் சட்டவிரோதமாக அட்டைகளை பிடித்த 4 பேர் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத தொழில் முறைகளை தடுக்கும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் அதிகாலை மாமுனை கடற்பகுதியில் குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது

Advertisement

கைது செய்யப்பட்ட நால்வரும் கடற்படை முகாம் அழைத்து வரப்பட்டு விசாரணைகளின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.