Advertisement

கோளரங்கம் நாளை முதல் மூடப்படுகிறது

இலங்கை கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (27) முதல் மார்ச் 12ம் திகதி வரை கோளரங்கம் மூடப்படும்.

Advertisement

கோளரங்கத்தின் புரொஜெக்டர்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கோளரங்கம் மூடப்படுகிறது.