Advertisement

கோட்டை ரயில் நிலையத்தில் சிறிய மாற்றம்; பயணிகளுக்கு முக்கிய தகவல்

கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட இலத்திரனியல் நேர அட்டவணை காட்சி சேவை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் மூலம், ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள பயணிகளுக்கும், ரயில் நிலையத்தின் பிரதான நுழைவாயில் அருகே உள்ள பயணிகளுக்கும், ரயில் நிலையத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு பிரதான திரைகள் மற்றும் 7 திரைகள் மூலம் ரயில் அட்டவணைகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.