கொஸ்டா டெலிசியோசா சொகுசு ரக பயணிகள் கப்பல் இலங்கைக்கு

கொஸ்டா டெலிசியோசா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

பிரித்தானியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று அதிகாலை வருகைத்தந்துள்ளனர்.

அதில் 1,978 பயணிகளும், 906 பணிக்குழாமினரும் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இத்தாலி நாட்டுக்கு சொந்தமான குறித்த கப்பல் இன்றிரவு மாலைதீவு நோக்கி செல்லவுள்ளது.